A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Sunday, 27 January 2019

கோயம்புத்தூர் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்லும் வழி

கோயம்புத்தூர் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்லும் வழி

கோயம்புத்தூர் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்லும் வழி

கோயம்புத்தூர் இரயில் நிலையம், தென்னக இரயில்வேயின் இரண்டாவது அதிக வருவாய் ஈட்டும் முக்கிய இரயில் நிலையம் ஆகும், இந்தியாவின் அனைத்து முக்கிய இரயில் நிலையத்துக்கு இங்கு இருந்து இரயில் வசதி உள்ளது


கோயம்புத்தூர் இரயில் நிலயத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம்:

  கோயம்புத்தூர் இரயில் நிலயத்தில் இருந்து முன் வாயில் வழியாக வெளியேறி சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உண்டு. மேலும் கோவை இரயில் நிலயத்தின் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்ததிட்கு சென்றால் 2 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உண்டு.

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் :

   கோவை இரயில் நிலைய முன் வாயில் வழியாக வெளியேறி அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் சென்றால் 2 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது. பயண கட்டணம் ரூ 6. தொலைவு 5 கிலோமீட்டர், இந்த வழியாக செல்லும் சொகுசு பேருந்துகள் கட்டணம் அதிகமாக இருக்கும். காலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அதிக பேருந்துகள் உள்ளன.
காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் SETC பேருந்து நிலையம் ஆகியன உள்ளது.
இங்கு இருந்து மாநிலத்தின் வடக்கு பகுதிகளுக்கும், கோவை மாநகரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது.

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் பேருந்து நிலையம்  :

   கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து சாலையை கடந்து சென்று சாந்தி தியேட்டர் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1c எனும் பேருந்து மூலமாக சிங்கநல்லூர் பேருந்து நிலையம் செல்லலாம், மேலும் 65 எனும் பேருந்து சிங்கநல்லூர் செல்லும், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது. பயண நேரம் 25 நிமிடங்கள், மேலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது.
     சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், திருப்பூர், மன்னார்குடி, இராமேஸ்வரம், கரூர், மதுரை, தாராபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, பாபநாசம், ஸ்ரீரங்கம் மேலும் பல வெளியூர்களுக்கு செல்ல பேருந்துகளும், காந்திபுரம், உக்கடம், போத்தனுர்,  செட்டிப்பாளயம், பப்பம்பட்டி, சூலூர், மருதமலை, வடவள்ளி, கரணம்பேட்டை, சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, போகம்பட்டி, கள்ளப்பாளயம், வெள்ளலூர், சோமனுர் செல்ல அதிக உள்ளூர் பேருந்துகள் உள்ளன.

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து போத்தனுர் இரயில் நிலையம் செல்ல  :

 கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் சென்றால் பேருந்து என் 8, 8A, 73D, 73 ஆகிய பேருந்துகள் மூலமாக செல்லலாம். 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது. மேலும் உள்கடம் பெருந்து நிலையம் சென்றால் அங்கு இருந்து பேருந்து எண் 4 மூலமாக போத்தனுர் செல்லலாம், இங்கு இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்தில் போத்தனுர் செல்லும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும். பயண நேரம் 15 நிமிடங்கள், பயண தூரம் 12 கிலோமீட்டர்.

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் செல்ல  :
   கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து பேருந்து எண் 2 மற்றும் 90A ஆகிய பேருந்துகள் நேரடியாக கோயம்புத்தூர் விமான நிலையம் செல்லும். பயண நேரம் 15 நிமிடங்கள்.  இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிகமானவை சொகுசு பேருந்துகள் ஆகும். எனவே கட்டணம் சற்று அதிகமாக இருக்கும்.

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து முக்கிய ஷாப்பிங் மால்ஸ் செல்லும் வழி :
     கோயம்புத்தூர் இரயில் நிலயத்தில் இருந்து பேருந்து எண் 2, 90A ஆகிய பேருந்துகளில் பீளமேடு பேருந்து நிலையம் என கேட்டு பயணம் செய்தால் FUN Republic Mall சென்றடையலாம். மேலும் 1c பேருந்துகள் அனைத்தும் Brookfields Mall செல்லும். மேலும் காந்திபுரம் சென்று அங்கு இருந்து சரவணம்பட்டி அல்லது சத்தியமங்கலம் செல்லும் எந்த பேருந்தில் பயணம் செய்தாலும் சரவணம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் Brozone Mall சென்றடையலாம்.

கோயம்புத்தூர் இரயில் நிலயத்தில் இருந்து  பேரூர் பட்டேஸ்வரர் கோவில் செல்ல வழி :
கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து மூலமாக டவுன் ஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேருந்து எண் 2 மூலமாக பேரூர் செல்லலாம்.

கோவை இரயில் நிலயத்தில் இருந்து மேட்டுப்பாளையம் அல்லது ஊட்டி செல்ல இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும், அங்கு இருந்து மேட்டுப்பாளையம் செல்ல 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி செல்ல அதிக பேருந்துகள் உள்ளன.

கோவை இரயில் நிலையத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் சென்றால் அங்கு இருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பாலக்காடு, திருச்சூர், பழனி, மதுரை செல்ல அதிக பேருந்து உள்ளது.

(C) - 28/01/2019    13.51