Avengers End Game - Some News and Release info Explained in Tamil | அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தமிழ் |
Avengers End Game - Some News and Release info Explained in Tamil | அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தமிழ்
உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அவெஞ்சர் எண்ட் கேம். இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை நமது இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஏப்ரல் மாதம் 26 உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்தாலும் சில நாடுகளில் முன்கூட்டியே வெளியாகும்.
எனவே ஏப்ரல் மாதம் 24 அல்லது 25 ம் தேதி இந்த திரைப்படத்தின் முழுமையான திரை விமர்சனம் காணலாம். தர்ப்போது அவெஞ்சர் எண்ட் கேம் திரைப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதில் கடந்த 10 வருடங்களாக டப்பிங் பேசி வந்த நபர்களை மாற்றி புதிய ஆட்கள் பேசியுள்ளனர். அதில் நமது விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் நமது மார்வெல் இன் முக்கிய கதாபத்திரமான ஐயன் மேன் க்கு குரல் கொடுத்துள்ளார், இது மார்வெல் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எனவே பழைய டப்பிங் ஆட்களையே பேச வைக்குமாறு மார்வெல் ட்விட்டர் பக்கத்தில் முறையிட்டனர். மேலும் விஜய் சேதுபதி குரல் ஐயன் மேன் கதா பாத்திரத்திட்கு முற்றிலுமாக பொருந்தவில்லை, ஐயன் மேன் மற்றும் அவரது பணக்கார திமிர் பேச்சு என ஏதும் விஜய் செதுபதியிடம் இல்லை.
மேலும் பழைய குரல் கொடுப்பவர்களும் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் டப்பிங் நபர்களின் வாழ்க்கை பிழைப்பை கெடுப்பதாக முறையிட்டனர். எனவே விஜய் சேதுபதி டப்பிங் மாற்றம் கொண்டுவரும் மார்வெல் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
மார்வெல் நிறுவனம் வெளியிட்ட செய்திகளின்படி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் 180 நிமிடங்களுக்கு மேல் ஓடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கேப்டன் மார்வெல் வரும் காட்சிகள் சற்றும் குறைவாக இருக்கும் எனவும், வான் வெளியில் சிக்கியுள்ள ஐயன் மேன் ஐ கேப்டன் மார்வெல் தான் காப்பாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. தர்ப்போது உள்ள கதாபாத்த்திரங்களில் கேப்டன் மார்வெல் தான் அதிக சக்தி உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹல்க் மற்றும் தனோஸ் இடையே சண்டை நடக்கும் என்றும் மேலும் தோர் சுத்தியலை கொண்டு கேப்டன் அமெரிக்கா தனோஸ் உடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடுவார் எனவும் பொதுவாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் டைம் ட்ராவல் கதையை சிறிது கொண்டுள்ளது எனவும் இதில் இரண்டு கேப்டன் அமெரிக்கா இரண்டு ஐயன் மேன் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன என்று ஊகிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
------ கடைசி புதுப்பித்தது 21/04/2019