சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. |
சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இன்று நடப்பு சாம்பியன் அணியான சென்னை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலாக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி சுற்று ஒன்றில் சென்னை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு நுழைந்தது. சென்னை அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆரம்பம் முதல் குறூப் போட்டிகளில் மற்றும் தகுதி சுற்று போட்டிகள் என அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடந்த இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் டீ கோக் அதிரடியாக ஆட தொடங்கினர். பவர் பிலே முடிவதற்குள் இவரும் ஆட்டம் இலந்து வெளியேற சூர்யகுமர் மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் பொறுமையாக ஆட ஸ்கோர் மந்தமாக இருந்தது. பின்னர் முன்கூட்டியே கலம் இறங்கிய பொள்ளார்ட் மற்றும் ஹார்டிக் பாண்டிய அதிரடி காட்ட தொடங்கினர். ஒரு முனையில் பொள்ளார்ட் அடிக்க மறு முனையில் விக்கெட் போய்க்கொண்டே இருந்ததால் மொத்த ரன் 149 மட்டுமே அடிக்க முடிந்தது.
பின்னர் கலம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு ப்ளஸிஸ் ஆட்டம் தொடங்கியதும் அவுட் ஆக பின்னர் வாட்சன் உடன் ஜோடி சேர்ந்தார் ரெய்னா. ரெய்னா வந்த வேகத்தில் அவுட் ஆக பின்னர் வந்த ராயுடு அதே போன்று அவுட் ஆனார். பின்னர் டோனி ரன் அவுட் ஆக சென்னை அணி பரிதாப நிலைக்கு சென்றது. இருந்தாலும் மறு முனையில் நிலைத்து நின்று ஆடிய வாட்சன் மலிங்காவின் ஒரு ஓவரில் 20 ரன்களை அடித்து சென்னை அணி வசம் போட்டியை கொண்டுவந்தார். ஆனால் மறு முனையில் ஆடிய பிராவோ அவுட் ஆனதும் வாட்சன் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜா மற்றும் தாகூர் கடைசி ஓவரில் கலத்தில் இருந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட மலிங்கா வீசிய பந்தில் தாகூர் LBW அவுட் ஆக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி IPL2019 சாம்பியன் ஆனது.
சென்னை அணி சார்பில் சஹர் 3 விக்கெட்டுகளையும், தஹிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மும்பை அணி சார்பில் 4 ஓவர் கலை வீசிய சஹர் மற்றும் பூமரஹ் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
அதிக ரன்களை அடித்தற்காக டேவிட் வார்னர் மற்றும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியதட்கு இம்ரான் தஹிர் மற்றும் அதிக மதிப்பு மிக்க வீரர் விருது ஆண்ட்ரே ரசல் சார்பாக சுபமன் கில் பெற்றார். மும்பை அணி 2019, 2017, 2015, 2013 என ஒற்றைப்படை இழக்க வருடங்களில் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சென்னை அணி இரண்டாம் இடம் பிடித்ததற்கு சென்னை அணி சார்பில் காசோலை ரூ.12 கொடியை 50 லட்சம் அணி கேப்டன் தோனி பெற்றார். முதல் இடம் பிடித்ததற்காக மும்பை அணிக்கு ரூ 20 கோடி வழங்கப்பட்டது. அதனை அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றார்.