A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Wednesday, 1 May 2019

CSK VS DC Dream11 Team, Playing XI, Predictions | சென்னை எதிர் டெல்லி ஐபிஎல் முதலிடம் யாருக்கு

CSK VS DC Dream11 Team,  Playing XI,  Predictions | சென்னை எதிர் டெல்லி ஐபிஎல் முதலிடம் யாருக்கு மற்றும் Dream11 கணிப்புகள்

CSK VS DC Dream11 Team,  Playing XI,  Predictions | சென்னை எதிர் டெல்லி ஐபிஎல் முதலிடம் யாருக்கு மற்றும் Dream11 கணிப்புகள்


சென்னை சூப்பர் கிங்ஸ் :

   கேப்டன் தோனி இல்லாமல் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது சென்னை அணி. மேலும் இனி வரும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரண்டு இடங்களில் சென்னை அணியால் இருக்க முடியும். எனவே இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக சென்னை அணிக்கு உள்ளது. கேப்டன் தோனி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் இன்றைய போட்டியில் விளையாடுவதும் சந்தேகம் என கூறப்படுகிறது. டாஸ் போடும் நேரத்தில் தான் அவர் விளையாடுவது பற்றி தெரியும். 

    தோனி இல்லாமல் சென்னை அணியில் உடல் நல குறைவால் விளையாடாத பாப் டூ ப்ளஸிஸ் மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் பூரணமாக குணமடைந்தனர். எனவே அவர்கள் விளையாட வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

   டெல்லி அணியில் முதல் 5 ஆட்டக்காரர்களில் 3 பேர் இடது கை ஆட்டக்காரர்கள். மேலும் சென்னை அணி தனது சொந்த ஊரில் விளையாடும் பொழுது ஹர்பஜன் சிங் அனைத்து போட்டிகளிலும் விளையாடி உள்ளார். எனவே இன்றும் அவர் விளையாடுவது ஏறக்குறைய உறுதி.

    மேலும் அணி கேப்டன் தோனி தவிர வேறு எவரும் அதிக ரன்களை அடிக்கவில்லை. முக்கியமாக ரெய்னா, ராயுடு மற்றும் டு ப்ளஸிஸ் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இல்லை. எனவே சென்னை  அணிக்கு இது ஒரு பெரும் பின்னடைவு.

    கடந்த போட்டியின்போது அணி பயிற்சியாளர் ராயுடு மற்றும் ஜாதவ் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் வீனடிப்பதாக கூறியுள்ளார். எனவே அவர்கள் விலயடுவர்களா என உறுதிசெய்துகொள்ளவும். பிராவோ மிக முக்கியமான வீரர் ஆவர். அவர் கடைசி கட்ட ஓவர்களில் அருமையாக பந்து வீசும் திறன் உடையவர். மேலும் சூழல் பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர் அருமையாக விளையாடி வருகிறார். எல்லா போட்டிகளிலும் விக்கெட் எடுத்து வருகிறார்.



டெல்லி கேப்பிடல் :

    இளம் வீரர்களுடன் களம்கண்ட டெல்லி அணி இன்று முதல் இரண்டு இடங்களில் உள்ளது. அதற்கு காரணம் முதல் மூன்று தொடக்க ஆட்டகாரர்கள் நூறு ரன்கள் அடித்துள்ளார். மேலும் அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடுவதால் விளையாடும் நபர்களில் எந்த மாற்றமும் இருக்க அதிக வாய்ப்புகள் இல்லை.

   சந்தீப் லமிச்சனே டெல்லி அணி சொந்த ஊரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விளையடியுள்ளார். மேலும் சென்னை ஆடுகளம் சூழல் பந்துக்கு எதுவாக இருக்கும். எனவே இன்றும் இவர் விளையாடுவர் என எதிர்பார்க்கலாம் ..

    அமித் மிஸ்ரா டெல்லி அணியில் மிக முக்கியமான ஸ்பின்னர் ஆவர். மேலும் ரபாடா சிறந்த வேக பந்து வீச்சாளர் ஆவர் . அவர் விளையாடும் அனைத்து போட்டிகளின்போதும் விக்கெட் எடுக்க தவறியதில்லை. மேலும் இந்த வருடத்தில் டெல்லி அதன் சொந்த மண்ணில் இதுவரை அதிக போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. ஆனால் வேறு மைதானத்தில் இந்த அணி இதுவரை தோல்வி கண்டது இல்லை.


போட்டி கணிப்புகள் :

தவான் vs ஸ்பின்னர்
    தவான் தர்ப்போது அனைத்து வகை பந்துகளை அடிப்பதால் ஹாபாஜன் பந்துவீச்சு கடினமாக இருக்காது. ஆனால் தீபக் சஹர் பந்து வீச்சில் சற்று தடுமாறுகிரர் தவான். மேலும் அவரிடம் ஒரு முறை விக்கெட் விட்டுள்ளார்.


சென்னை அணி டெல்லிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஜடேஜா வலது கை பேட்ஸ்மேன்கலை அதிக விக்கெட் எடுத்துள்ளார் .  மேலும் தவான் இந்த மைதானத்இல் அதிகமாக ரன் எடுத்துள்ளார்.

கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்...


  தவான் : தர்ப்போது சிறப்பான முறையில் விளையாடும் இவர் எந்த அணி பந்துவீச்சையும் அடித்து ஆடுகிறார். மேலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை உள்ளவர்.

சிரியாஸ் ஐயர் :   சூழல் பந்து வீச்சில் அருமையாக செயல்படகூடியவர். மேலும் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளார்.

பந்த் : டோனி விளையாடாத பட்சத்தில் முக்கியமான கீப்பர் பந்த் ஆவர். அதிரடியாக விளையாட கூடியவர். குறைவான பந்துகளில் அரைசதம் அடுத்தவர்.

தஹிர் : கண்டிப்பாக விளையாடும் போட்டிகள் அனைத்திலும் விக்கெட் எடுக்கும் திறன் உடையவர்.

பிராவோ : கடந்தமுறை டெல்லி அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஜடேஜா : இடது கை பேட்ஸ்மேன் களுக்கு எதிராக போதிய விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆனால் டெல்லி 3 தொடக்க இடது கை பேட்ஸ்மேன் உடையது.

ராயுடு : விளையாடுவது உறுதியாக தெரியவில்லை. இந்த தொடரில் சிறந்த பேட்டிங் இல்லை.

ரபாடா : முக்கியமாக பாண்டஸி அணியில் இருக்க வேண்டிய வீரர். அனைத்து போட்டிகளிலும் விக்கெட் எடுக்கும் திறன் உடையவர்.

ஜாதவ் : சிறப்பான பேட்டிங் இல்லை. போதிய அளவு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவரை எடுக்கும் பட்சத்தில் போதிய பாயிண்ட் கிடைக்காது.

ப்ரிதிவ் ஷா : அதிரடி தொடக்க வீரர். ஆனால் ஸ்பின் பௌலிங் எதிராக தடுமாறுகிறார். கடந்த சில போட்டிகளில் போதிய அளவு பாயிண்ட் எடுக்கவில்லை. ஆனால் எந்த நேரமும் ஆட்டத்தின் போக்கை மற்றக்கூடியவர்.