சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் சிவப்பு நிற பேருந்து. |
கோவையில் சிவப்பு நிற பேருந்து - தீபாவளிக்கு முன்பாக பயணம் செய்யலாம்
சென்னைக்கு அடுத்தபடியாக இனி கோவையில் தாள்தல சொகுசு பேருந்து இனி கோவை மாநகரத்தின் முக்கிய சாலைகளில் பயணிக்கும்.
தமிழ்நாடு அரசு போக்குவத்து கழகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளதாவது " அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை பிரிவு கூடிய விரைவில் பழைய 50 பேருந்துகளுக்கு பதிலாக புதிய தாழ் தள சொகுசு பேருந்து இயக்கப்படும் எனவும், அரசின் தடையில்லா சான்று பெற காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பேருந்துகள் முன்னரே கோவை மாநகரம் கொண்டுவந்து விட்டதாகவும், மாற்றம் செய்ய வேண்டிய பேருந்துகள் கணக்கீடு செய்ததாகவும், புதிய சிவப்பு நிற பேருந்துகளை இயக்க மாநில அரசின் தடையில்லா சான்று பெற நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த பேருந்துகள் தீபாவளிக்கு முன்னரே கோவையில் இயக்கப்படும் என்று கருதுவதாக கூறியுள்ளனர்.
முழுவதும் இந்திய கட்டமைப்பில் உருவான இந்த தாழ் தள சொகுசு பேருந்து ஒவ்வொன்றும் ரு. 28 லட்சம் மதிப்பு ஆகும்.
911 வெப் நெட்வொர்க் |
இந்த பேருந்துகள் அனைத்தும் பக்கெட் இருக்கைகள் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் கொண்டவை. முந்தைய பேருந்துகள் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொண்டவையாக இருந்தன. எனவே முந்தைய பேருந்துகளை விட அதிக சொகுசு வசதி உடையதாக இந்த பேருந்து இருக்கும். மேலும் அதிக லைட் வெளிச்சம் உடையவையாகவும் இருக்கும்.
மும்பை மாநகர் மற்றும் லண்டன் நகரங்களில் சிவப்பு நிற பேருந்துகள் முன்னரே இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கூடிய விரைவில் கோவையிலும் சிவப்பு நிற பேருந்துகளை காணலாம்.
மேலும் புதிய செய்திகளை பெற எங்களது டெலிகிராம் செயலியில் இனையவும். டெலிகிராம் செயலியில் fytrain என்று தேடினால் எங்களது சேனல் கிடைக்கும் .