A House of Railway Informations, TNSTC & More Bus information, New Train Updates, Train Delay and Travel Updates

Breaking

Monday, 25 November 2019

Singanallur Bus Stand |சிங்கநல்லூர் பேருந்து நிலையம் | பயண விபரம், எவ்வாறு செல்வது, அடிப்படை வசதிகள்

Singanallur Bus Stand |சிங்கநல்லூர் பேருந்து நிலையம் | பயண விபரம், எவ்வாறு செல்வது, அடிப்படை வசதிகள்




  • சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களுக்கு பேருந்து வசதி உண்டு
  • 24 மணி நேரமும் நகரின் மற்ற பேருந்து நிலையங்கள் செல்ல பேருந்து வசதி உள்ளது.
  • கோவை நகரின் முக்கிய பேருந்து நிலையம் ஆகும்
  • சிங்கநல்லூர் பேருந்து நிலையம், சிங்கநல்லூர் - ஹோப்ஸ் காமராஜர் சாலையில் உள்ளது

Singanallur Bus Stand |சிங்கநல்லூர் பேருந்து நிலையம் | பயண விபரம், எவ்வாறு செல்வது, அடிப்படை வசதிகள்

      சிங்கநல்லூர் பேருந்து நிலையம் நகரின் முக்கிய இடம் ஆகும். இங்கு இருந்து தமிழகத்தின் கரூர், பல்லடம், திருப்பூர், திருச்சி, இராமேஸ்வரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேளாங்கண்ணி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி உண்டு. மேலும் திருச்சி, மதுரை, கரூர் செல்ல 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உண்டு. இங்கு இருந்து பேருந்து சேலம், ஈரோடு, சென்னை, வேலூர், திருப்பதி, பெங்களூர், ஊட்டி, பொள்ளாச்சி செல்லாது. மேலும் இந்த பேருந்து நிலையத்தின் அருகில் பல தரமான தனியார் உணவகங்கள் உள்ளன, மேலும் பேக்கரி 24 மணி நேரமும் செயல்படுபவை உண்டு. அம்மா உணவகம் பேருந்து நிலயத்தின் உள் பகுதியில் உள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடம் கட்டண கழிப்பிடம் ஆகியவை உண்டு, பயணிகள் அமர நாட்கலி வசதி உண்டு. மேலும் காந்திபுரம் செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தின் உள் பகுதிக்கு வந்து செல்லும். இந்த பேருந்து நிலையத்தின் அருகில் அரசு தொழிலாளர் இலவச மருத்துவமனை ESI உள்ளது. 

செல்லும் வழிகள் :-

  * காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து 140 எண் பேருந்து சிங்கநல்லூர் செல்லும். மேலும் பேருந்து எண் 95 சிங்கநல்லூர் பேருந்து நிலையம் செல்லும், மேலும் பல தனியார் பேருந்துகளும் காந்திபுரம் - சிங்கநல்லூர் இடையே இயங்குகிறது. மேலும் காந்திபுறம் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப்ஸ் பேருந்து நிலையம் வந்து அங்கு இருந்து சிங்கநல்லூர் செல்லலாம். 

   * உக்கடம் பேருந்து நிலயத்தில் இருந்து சூலூர், பாப்பம்பட்டி பிரிவு, ஒண்டிபுதுர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சிங்கநல்லூர் செல்லும். மேலும் பேருந்து எண் 77, 77A, 77B, 19, 37, 52, 30, 105, 69, ஆகிய பேருந்துகள் சிங்கநல்லூர் செல்லும். சிங்கநல்லூர் சிக்னல் அருகில் இறங்கி அங்கு இருந்து காமராஜர் சாலையில் சென்றால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்லலாம். 

  * கோயம்புத்தூர் இரயில் நிலயத்தில் இருந்து வெளியே வந்து மெயின் ரோடு சென்றால் அங்கு இருந்து வடவள்ளி - ஒண்டிபுதுர் இடையே இயங்கும் பேருந்து எண் 1C சிங்கநல்லூர் செல்லும். இந்த பேருந்து 10 நிமிடங்களுக்கு ஒன்று உள்ளது. 

   * வடகோவை அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் வர முதலில் காந்திபுரம் மாநகர பேருந்து நிலையம் வந்து அங்கு இருந்து சிங்கநல்லூர் வரலாம். 

சூலூர், பல்லடம், திருப்பூர் , உடுமலை செல்லும் பேருந்துகள் சிங்கநல்லூர் பேருந்து நிலயத்தின் உள்ளே வராது. திருச்சி சாலையில் உள்ள கரும்புக்கடை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். மேலும் பல பேருந்துகள் இரவு நேரங்களில் சிங்கநல்லூர் உக்கடம் மற்றும் சிங்கநல்லூர் காந்திபுரம் இடையே இயக்கப்படுகிறது.